சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-4வயது மகள்; திடீரென நேர்ந்த சோகம் - போலீசார் விசாரணை!

Tamil nadu Death Karur
By Jiyath Oct 18, 2023 04:11 AM GMT
Report

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கறி சாப்பிட்ட அப்பா-மகள்

கரூர் மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த தம்பதி கவுதம் ஆனந்த (33) மற்றும் அவரின் மனைவி பவித்ரா. இவர்களுக்கு 4 வயதில் மிதுஸ்ரீ என்ற மகள் இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் மூவரும் கடையில் கோழிக்கறி வாங்கி சமைத்து சாப்பிட்டுள்ளார்.

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-4வயது மகள்; திடீரென நேர்ந்த சோகம் - போலீசார் விசாரணை! | Father Daughter Died Eating Chicken Curry Karur

சிறிது நேரத்தில் மகள் மிதுஸ்ரீக்கு வயிற்று ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். உடனடியாக சிறுமியை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

'நான் சட்டக்கல்லூரி மாணவி' - குடிபோதையில் இளம்பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசி ரகளை!

'நான் சட்டக்கல்லூரி மாணவி' - குடிபோதையில் இளம்பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசி ரகளை!

உயிரிழப்பு

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சிறுமியின் தந்தையான கவுதம் ஆனந்திற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிக்கன் கறி சாப்பிட்ட தந்தை-4வயது மகள்; திடீரென நேர்ந்த சோகம் - போலீசார் விசாரணை! | Father Daughter Died Eating Chicken Curry Karur

இதற்கிடையே மகள் மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை கவுதம் ஆனந்தும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களின் இறப்புக்கு சாப்பிட்ட கோழிக்கறிதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.