காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள 'ஜவுளி நகரம்' கரூர் - இங்கு சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

Karur
By Jiyath Aug 21, 2023 11:51 AM GMT
Report

கரூர் மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றி பார்ப்போம்.  

கரூர்

தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான கரூர், தமிழர்களின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 2,895 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

கரூர் நகரம் சங்க காலத்தில் சேரர்களின் தலைநகரமாகவும் புகழ் பெற்ற தொழில் மையமாகவும் விளங்கியது. குடிசைத் தொழில்களுக்கும் கைத்தறி நெசவுத் துணிகளுக்கும் புகழ்பெற்ற நகரமாக திகழும் இந்த நகரத்திற்கு பசுபதீஸ்வரர் கோயில் அடையாளச் சின்னமாக திகழ்கிறது.

பருத்திப் புடவைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் கரூர் ஜவுளித் தொழில் செழித்து வருவதால் “ஜவுளி நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய 7சுற்றுலாத் தலங்களை பற்றி பார்ப்போம்.

அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர்

கோயில் இந்த கோவில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். 2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படும் இத்திருக்கோயில் முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ வம்ச மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது.

அரசு அருங்காட்சியகம்

அரசு அருங்காட்சியகம் கரூர் மாவட்டம் பழைய திண்டுக்கல் ரோட்டில் ஜவஹர் பஜாரில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் துறையால் 1973, 1977 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் மூன்று அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் , சேர , சோழ மற்றும் பாண்டிய நாணயங்களின் சில தொகுப்புகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

மேலும் படிமங்கள், தாவரவியல் மாதிரிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் மற்றும் பிற கடல் மாதிரிகள் ஆகியவை பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் சிறந்த விரிவுரைகள், வழிகாட்டி சேவைகள் மற்றும் பிற நிகழ்வுகளும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படுகின்றன. இது மக்களின் பார்வைக்காக 2000 ஆண்டில் துவங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

திருக்காம்புலியூர் அம்மா பூங்கா

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

இந்த பூங்கா கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அம்மா பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இது கரூர் மாவட்டத்திலிருந்து 23 கி.மீ. தொலைவிலும் குளித்தலையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும் காவிரி ஆற்றிற்கு அருகில் அமைந்துள்ளது.

மாயனூர் கதவணை

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

இந்த அணை கரூரிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் கட்டப்பட்டு உள்ளது. மாயனூர் தமிழகத்தின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி எய்த நிலப்பரப்பின் எல்லையாக மாயனூர் விளங்குகிறது. மாயனூர் அணை ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.

பொன்னணியார் அணை

கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலாத் தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது. இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

அருள்மிகு சதாசிவப் பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர்

கரூர் மாவட்டத்தில், கரூர் – திருமுக்கூடலூர் சாலையில் 13-வது கிலோ மீட்டர் தொலைவில் நெரூர் கிராமத்தில் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் ஜீவ சமாதியும், அதற்கு முன்புறம் அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

இந்த ஜீவ சமாதி காவிரிக் கரையில் ஒரு சோலையில் அமைந்துள்ளது. காவிரியாறு இவ்விடத்தில் தெற்கு நோக்கி ஓடுவது மிகச் சிறப்பான அம்சமாகும். தமிழகத்திலிருந்து மட்டுமன்றி பிற மாநிலத்தவரும் வருகை தரும் ஒரு அற்புத தலமாகும்.

அய்யர்மலை

கரூர் மாவட்டத்தில் குளித்தலையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அய்யர்மலை அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார்.

காவிரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள

ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோட்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது மற்றும் சித்திரை திருவிழா, தைப்பூசத் திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா ஆகியவை பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.