'நான் சட்டக்கல்லூரி மாணவி' - குடிபோதையில் இளம்பெண் போலீசாரிடம் ஆபாசமாக பேசி ரகளை!
இளம்பெண் ஒருவர் குடிபோதையில் போலீசாரிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதை
சென்னை கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரேகா (26). நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் அதீத மது போதையில் பைக்கை தாறுமாறாக ஓட்டி வந்து திடீரென தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ரேகாவை மீட்டு பெரம்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ரேகா தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் ரேகாவிடம் விசாரணை செய்தனர்.
போலீசாரிடம் ரகளை
அப்போது குடிபோதையில் போலீசாரையும் அவர் தரக்குறைவாக பேசியுள்ளார். பெண் போலீசார் ஒருவரை தாக்கி அவரின் பேட்ச் மற்றும் ஹெட்செட்டை அறுத்து ரகளை செய்துள்ளார். மேலும், அந்த பெண் போலீசாரை ஆபாசமாக பேசியதாகவு கூறப்படுகிறது.
இதனையடுத்து ரேகா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த வீடியோவில் "தான் சட்டக்கல்லூரி மாணவி" என்றும் அந்த பெண் கூறியது பதிவாகியுள்ளது.