காதல் செய்...காதல் செய்.. தொந்தரவு செய்த இளைஞரால் சிதைந்து போன காவல்துறை குடும்பம்
காதல் செய்…காதல் செய்.. என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து இளைஞர் ஒருவர் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கொலை
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யாஸ்ரீ 20 வயதான இவர் தி. நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று காலை வழக்கம் போல் தனது தோழிகளுடன் கல்லுாரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் மாணவியிடம் காதலிக்க கோரி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றவே தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில் வந்து கொண்டிருந்த போது திடீரென மாணவி சத்யாஸ்ரீ-யை தள்ளி கொலை செய்துள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் சதீஷ் பிடிக்க முயன்ற போது அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து மாணவியை கொலை செய்த சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்தனர் காவல்துறையினர்.
தந்தை தற்கொலை
பின்னர் துரைபாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவி சத்யா இறந்த துக்கம் தாங்காமல் மாணவியின் தந்தை மாணிக்கம் காரில் அமர்ந்த படி மது குடித்துள்ளார்.
பின்னர் அவர் மயக்கம் அடையவே உறவினர்கள் அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணிக்கம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணிக்கம் மதுவில் மயில் துத்தம் என்ற விஷத்தை கலந்து குடித்துள்ளது தெரியவந்துள்ளது.
மகள் இறந்த துக்கம் தாங்காமல் அப்பா மாணிக்கமும் தற்கொலை செய்து கொண்டது மேலும் உறவினர்களுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிதைந்து போன காவல்துறை குடும்பம்
பின்னர் மகள் சத்யா உடல் இருந்த பிரேத பரிசோதனை அறையிலேயே, அவரது தந்தை மாணிக்கத்தின் உடலும் வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சத்யாஸ்ரீயின் தாய்மாமா சீனிவாசன் கையெழுத்திட்ட பிறகு பிரேத பரிசோதனை தொடங்கியது.
ஒரு பக்கம் மருமகள் சடலம், மற்றொரு பக்கம் மாமா சடலம் என இரு சடலங்களையும் பார்த்து காவலர் சீனிவாசன் கதறி அழுத சம்பவம் காண்போதை கண் கலங்க செய்தது.
சத்யாஸ்ரீயின் குடும்பம் ஒரு காவல் துறை குடும்பம் என்பதும் மாணவி சத்யாஸ்ரீயின் தயார் ராமலட்சுமியின் சகோதரரான சீனிவாசன் எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராகவும்,
ராமலட்சுமியின் தங்கை காஞ்சனா லஞ்ச ஒழிப்புத்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர். ராமலட்சுமியின் தந்தை முத்து காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மாணவி சத்யாஸ்ரீ, தந்தை மாணிக்கம் பிரேத பரிசோதனை முடிந்து உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது உறவினர்கள் சத்யா எழுந்து வா... என்று கூறியது அங்கிருந்தவர்களின் மனதை ரணமாக்கியது.
விஜய் ஆண்டனி ஆவேசம்
சத்யாஸ்ரீயை தொந்தரவு செய்வதாக காவல்துறை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் புகார் அளித்தும் போலீசார் விசாரணை நடத்தாமல் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்துள்ளது.
காதல் தொல்லையால் ஒரு காவல்துறை குடும்பமே சிதைந்து போய் உள்ளது பெரும் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் பாடகரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.