மோசமான நிலவரம்; போலீஸாருடன் கடும் மோதல் - விவசாயி உயிரிழப்பு, போராட்டம் நிறுத்தம்!
போரட்டம் தீவிரம் அடைந்த நிலையில் இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை,
கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தனர். இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சக்தி வாய்ந்த டிராக்டர்கள், தடுப்புகள் என விவசாயிகள் போரட்டம் தீவிரம் அடைந்தது.
ஒருவர் உயிரிழப்பு
விவசாயிகள் ஹரியானாவுக்குள் நுழைய முடியாதவாறு கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என தடுப்புகள் அமைக்கப்பட்டதை அடுத்து , போலீசார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 12 போலீசாரும், 3 விவசாயிகளும் படுங்காயம் அடைந்தனர்.
காயமடைந்த விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போராட்டத்தில் ஈடுப்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21-வயகான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்த நிலையில் தொடர்ந்து போரட்டம் இரண்டு நாளைக்கு நிறுத்தப்படுவதாக விவசாய சங்க தலைவர் தெரிவித்தார்.