இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி; வங்கிக் கணக்கில் ரூ.2000 - உங்களுக்கு வந்துருச்சா?
PM-kisan 15 வது தவணைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
PM-kisan
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதன்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் 8 கோடி விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயன் பெற்று வருகின்றனர்.
15-வது தவணை
இந்நிலையில் 15-வது தவணையினை நவம்பர் மாத கடைசி வாரத்தில் விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் விழாக்காலத்தை கருத்தில் கொண்டு,
இன்று ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் பணத்தினை பிரதமர் மோடி வரவு வைத்தார். இந்த தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.