இனி ஆதார் மட்டும் போதாது...APAAR கார்டும் எடுக்கணும்..!! எதுக்கு இந்த APAAR..?
மாணவர்களுக்கு இனி ஆதார் கார்ட் மட்டுமின்றி APAAR என்ற கார்டும் மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஆதார் கார்டு
நாட்டு மக்களின் அனைத்து தரவுகளையும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்ந்து விட்ட நிலையில், அரசு மட்டுமின்றி அனைத்து தனியார் பயன்பாடுகளுக்குமே தற்போது ஆதார் கார்டு அத்தியாவசியமாகியுள்ளது.
அதனை தொடர்ந்து தான் தற்போது APAAR என்ற கார்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நாட்டிலுள்ள கல்லுரிகளில் பயலும் மாணவ - மாணவிகளுக்காக இந்த கார்டு அறிமுகமாகவுள்ளது. நாட்டில் பெரும்பாலும், போலி சான்றிதழ்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் சான்றிதழை பயன்படுத்தி பெரும் மோசடி வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இந்த செயலை தடுப்பதற்காகவே, தற்போது APAAR கார்டு வரவுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகமாகவுள்ளது. ஆதார் கார்ட் போலவே, இந்த APAAR கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெரும். மாணவர்களின் மதிப்பெண், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவலும் இந்த APAAR இணைக்கப்படும்.
இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ID காண்பித்தாலே போதும், அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.