சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது - பிரதமர் மோடி!

Narendra Modi India Chhattisgarh
By Jiyath Nov 13, 2023 09:31 AM GMT
Report

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சத்தீஸ்கர் தேர்தல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 7ம் தேதி 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், வரும் 17ம் தேதி 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது - பிரதமர் மோடி! | Time Has Come For Congress To Vacate Chhattisgarh

இதாற்காக பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.

டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.

காதலியை 111 முறை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்; விடுதலை செய்த அதிபர் புதின் - ஏன் தெரியுமா?

காதலியை 111 முறை கத்தியால் குத்திக் கொன்ற காதலன்; விடுதலை செய்த அதிபர் புதின் - ஏன் தெரியுமா?

பிரதமர் மோடி பேச்சு

காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது - பிரதமர் மோடி! | Time Has Come For Congress To Vacate Chhattisgarh

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர். ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது.

அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.