யார் கை ஓங்கும்..? பாஜகவா...காங்கிரஸா..? சத்தீஸ்கர் - மிசோரம் மாநிலத்தில் தேர்தல்!!
இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் துவங்கி நடைபெற்று வருகின்றது.
சத்தீஸ்கர்
நாட்டின் 5 மாநில தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறுவதால் இது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று இரண்டு கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அம்மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. நேரடியாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் களத்தில் இருக்கும் இம்மாநிலத்தில் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற பிரதான மாநில கட்சியும் களத்தில் உள்ளது.
இவற்றை அடுத்து ஆம் ஆத்மீ கட்சி தனியாகவும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி - கோண்ட்வானா கணதந்திர கட்சி கூட்டணி, மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 90 இடங்களுக்கு இன்று மற்றும் வரும் 17-ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 9 மணி நிலவரத்தின் படி அம்மாநிலத்தில் 9.93% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிசோரம்
இந்திய வடகிழக்கு மாநிலமான மிசோரம் மாநிலத்திற்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகின்றது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரே தேர்தல் நடைபெற்று வருகின்றது. அம்மாநிலத்தில் மாநில கட்சியான மிசோ நேஷனல் பிராண்ட் என்ற கட்சி தான் ஆட்சியில் உள்ளது.
இம்முறை மிசோ நேஷனல் பிராண்ட் - காங்கிரஸ் - பாஜக போன்ற கட்சிகளுகளுக்கிடையே நேரடி போட்டி நீடிகிறது. காலை 9 மணி நிலவரத்தை படி, 7.67% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.