உரிமைத் தொகை ரூ.1000: மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உடனே இதை பண்ணுங்க!

Tamil nadu Government of Tamil Nadu DMK
By Jiyath Nov 07, 2023 04:18 AM GMT
Report

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இத்திட்டத்தை அறிஞர் அண்ணா பரந்தானாலான கடந்த செப்டெம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உரிமைத் தொகை ரூ.1000: மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உடனே இதை பண்ணுங்க! | Magalir Urimai Thogai Amount Sms To Appeal Persons

அதன்படி சுமார் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

கணவர் மீது முன்னாள் அமைச்சர் 'சந்திர பிரியங்கா' டி.ஜி.பியிடம் பரபரப்பு புகார்!

கணவர் மீது முன்னாள் அமைச்சர் 'சந்திர பிரியங்கா' டி.ஜி.பியிடம் பரபரப்பு புகார்!

தொடங்கிய பணி

அதன்படி மேல் முறையீடு செய்த சுமார் 11.86 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

உரிமைத் தொகை ரூ.1000: மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உடனே இதை பண்ணுங்க! | Magalir Urimai Thogai Amount Sms To Appeal Persons

இந்நிலையில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தியை பெற்ற குடும்பத் தலைவிகளுக்கு வரும் 10ம் தேதி வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்  . மேலும், அவர்களுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்காணத்தில் தொடங்கி வைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.