தீவிர போராட்டம்; விவசாயி, போலீஸ்காரர் பலி - காரணமான கண்ணீர் புகைகுண்டு?

Death Haryana
By Sumathi Feb 17, 2024 03:29 AM GMT
Report

விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவரும், போலீஸ்காரரும் பலியாகியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணியில் ஈடுபட முடிவெடுத்தனர்.

farmers protest

அதனைத் தொடர்ந்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால், ஹரியானா அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது. டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர்.

பேச்சுவார்த்தை எடுப்படவில்லை; நாடு தழுவிய முழு அடைப்பு - என்னென்ன சிக்கல்கள் நேரும்?

பேச்சுவார்த்தை எடுப்படவில்லை; நாடு தழுவிய முழு அடைப்பு - என்னென்ன சிக்கல்கள் நேரும்?

2 பேர் உயிரிழப்பு

இதற்கிடையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர போராட்டம்; விவசாயி, போலீஸ்காரர் பலி - காரணமான கண்ணீர் புகைகுண்டு? | Farmer And Cop Death Farmers Protest Haryana

இந்நிலையில், சாம்பு எல்லையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வரும் நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த 65 வயதான கியான் சிங் மாரடைப்பால் மரணமடைந்தார். இதற்கிடையில், அரசு ரயில்வே போலீஸ் படையின் அதிகாரி ஹிரா லால்(56).

பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பா வந்ததால், கண்ணீர் புகை குண்டு காரணமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.