திணறும் தலைநகர்; விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை - போராட்டம் முடிவுக்கு வருமா?
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.
மத்திய அரசு பேச்சுவார்த்தை
இந்த பேரணிக்கு டெல்லி சலோ எனப் பெயரும் வைத்துள்ளனர். இதனால், ஹரியானா - டெல்லி எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கூட்டத்தை கலைக்க ட்ரோன்களை பயன்படுத்தி கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். காவல்துறையினர் அமைத்திருந்த கான்கிரீட் தடுப்புகளை டிராக்டர்கள் மூலம் இடித்து தள்ளினர்.
#WATCH | Farmers' protest | Tear gas shells fired to disperse the agitating farmers who were approaching the Police barricade.
— ANI (@ANI) February 14, 2024
Visuals from Shambhu Border. pic.twitter.com/AnROqRZfTQ
காவல்துறையினர் வீசிய கண்ணீர் புகை குண்டு வீச்சில், சுமார் 60 விவசாயிகள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டீகரில் இன்று மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இதில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், மத்திய அரசை கண்டித்து நாளை நாடு தழுவிய அடைப்புப் போராட்டத்துக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.