பேச்சுவார்த்தை எடுப்படவில்லை; நாடு தழுவிய முழு அடைப்பு - என்னென்ன சிக்கல்கள் நேரும்?
நாடு முழுவதும் விவசாயிகள் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணியில் ஈடுபட முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால், ஹரியானா அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது.
பாரத் பந்த்
டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கிடையில், மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 18-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்யுக்தா கிஷான் மோர்ச்சா உள்பட பல விவசாய அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று நடைபெற உள்ள பாரத் பந்தில் அதிமுகவின் 17 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், போக்குவரத்து, விவசாய பணிகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள், தனியார் அலுவலகங்கள், கிராமப்புற அலுவலகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.