100 முதலைகளை கொன்று குவித்த உரிமையாளர் - இப்படி ஒரு காரணமா?
பண்ணை உரிமையாளர் 100 முதலைகளை கொன்று குவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை பாதிப்பு
தாய்லாந்து, லாம்பூன் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நெத்தம்பக் கும்காட்(37). இவர் தனது தோட்டத்தில் முதலை பண்ணை வைத்து 100-க்கும் மேற்பட்ட சியாமி இன முதலைகளை வளர்த்து வந்தார்.
இந்த முதலைகள் 14 முதல் 16 அடி நீளம் கொண்டவை. இந்நிலையில், இப்பகுதியில் புயல் காரணமாக சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளநீர் இவரது பண்ணையை சூழ்ந்துந்துள்ளது.
உரிமையாளர் செய்த செயல்
தொடர்ந்து சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தால், பண்ணைக்குள் வெள்ளநீர் புகுந்து முதலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வெளியேறி மக்களை தாக்கி கடித்து தின்றுவிடும் என அஞ்சியுள்ளார்.
எனவே, மக்களின் உயிர் தான் முக்கியம் என உணர்ந்த கும்காட், மர அறுவை மிஷன் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட முதலைகளை அறுத்து கொன்று குவித்துள்ளார்.
அதனை புகைப்படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, மக்களை காப்பாற்ற தான் வளர்த்த முதலைகளை கொன்றது எனது அவசர முடிவு எனக் கூறி அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.