இப்படி நூடுல்ஸ் சாப்பிட்டுள்ளீர்களா.. முதலைக் கால் வறுவலோடு - வைரலாகும் ஹோட்டல்!
முதலைக் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விநோத உணவு
தைவான் நாட்டில் ஒரு உணவகத்தில் மிகவும் விநோதமான உணவு ஒன்று பரிமாறப்பட்டிருக்கிறது. அதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. டவுலியு நகரில் உள்ள நுவு மா குயே என்ற உணவகம் உள்ளது.
அது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஷ் அங்குள்ள இளம் பெண் ஒருவருக்கு பரிமாறப்படுகிறது.
வைரல் உணவகம்
அவர் அதனை ருசித்து சாப்பிடுகிறார். மேலும், இந்த முதலைக் கால் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறியுள்ளார். அந்த உணவுக்கு காட்ஜில்லா ராமென் எனப் பெயர் வைத்துள்ளனர்.
இந்த டிஷ் இந்திய மதிப்பில் ரூ.3,900 தான். இதற்காக டைட்டுன் மாகாணத்தில் இருக்கும் ஒரு முதலைப் பண்ணையில் இருந்து முதலைகளை வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், முதலைக் கறி உணவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.