முட்டையை எடுக்கச் சென்ற முதியவர் - 40 முதலைகள் கடித்துக் குதறிய திடுக்கிடும் சம்பவம்
40 முதலைகள் ஒன்று சேர்ந்து ஒரு முதியவரைக் கடித்துக் குதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
சொந்த பண்ணை
கம்போடியாவைச் சேர்ந்தவர் லுவான் நாம்(72). இவர் தனது சொந்த முதலைப் பண்ணைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அங்கு அவரின் பண்ணையில் உள்ள முதலை ஒன்று முட்டைகளை இட்டுள்ளது.
அதனால், அவர் தாய் முதலையை கூண்டிலிருந்து வெளியே இழுத்து, முட்டைகளைச் சேகரிக்க முயன்றுள்ளார். எனவே, குச்சி ஒன்றை எடுத்து முதலையை விரட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது, குச்சியைப் பிடித்த முதலை, அவரை வேகமாக இழுத்தது.
குதறிய முதலைகள்
அதில் தடுமாறிய அவர், கீழே விழுந்த நிலையில், அங்கிருந்த சுமார் 40 முதலைகள் அவரைச் சுற்றி வளைத்து குதறியுள்ளது. வலியால் அலறியவர் சில மணி நேரத்திலேயே பரிதமாபாக உயிரிழந்தார். இதுகுறித்து சியம் ரீப் பகுதியின் தலைமைக் காவலர் மேய் சேவரி,
``சியம் ரீப் பகுதியைச் சுற்றி முதலைப் பண்ணைகள் அதிகமாக இருக்கின்றன. முதலையின் முட்டை, தோல், இறைச்சிக்காக மக்கள் அதை அதிகமாக வளர்க்கின்றனர். இதுபோல 2019-ம் ஆண்டும், இரண்டு வயது சிறுமி ஒருவர் தவறுதலாக அவர்களது முதலைப் பண்ணைக்கு அருகே சென்றபோது, முதலைகள் கடித்துக் கொல்லப்பட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.