ஆற்றில் மூழ்கிய சிறுவன்..சுற்றிவளைத்த முதலைகள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Viral Video Uttar Pradesh
By Sumathi Aug 27, 2022 05:30 PM GMT
Report

முதலைகள் நிறைந்த ஆற்றில் மூழ்கிய சிறுவனின் வீடியோ இணையத்தில் வெளியாகி பதர வைத்துள்ளது.

மூழ்கிய சிறுவன்

உத்தரப் பிரதேசம், முதலைகள் நிறைந்த சம்பல் ஆற்றில் சிறுவன் ஒருவன் மூழ்கி, உதவி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறான்.

ஆற்றில் மூழ்கிய சிறுவன்..சுற்றிவளைத்த முதலைகள் - பதைபதைக்க வைக்கும் வீடியோ! | Video Of Rescue Boat Saving Child From Crocodile

இந்த வீடியோவை உத்திரப் பிரதேச காவலர் சச்சின் கௌசிக் என்பவர் பகிர்ந்துள்ள நிலையில், “இது ஒரு திரைப்படத்தைப் போன்ற உண்மையான காட்சி! சிறுவன் சம்பல் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்தான்.

காப்பாற்றிய மீட்புக்குழு

பின்னால் முதலைகள் இருந்தன. மீட்புக் குழுவினர் சரியான நேரத்தில் வந்து சிறுவனைக் காப்பாற்றிய மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள்” எனப் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில், அரைகுறையாக நீச்சல் தெரிந்த சிறுவன் ஒருவன் ஆற்றில் சிக்கியுள்ளான்.

சில முதலைகள் சிறுவனைச் சுற்றி வட்டமிடத் தொடங்குகின்றன. காண்போரை பெரும் பதட்டத்துக்குள்ளாக்கும் நிலையில், நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் சிறுவனை விரைந்து படகில் வந்து மீட்புக் குழு காப்பாற்றுகிறது.

இதனைக் கண்ட பலர் இந்த வீடியோ சம்பல் ஆற்றில் எடுக்கப்பட்டதாகவும், சிறுவனை மாநில பேரிடர் மீட்புப் படை காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்து மீட்புக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.