தன்னையே மறந்துப்போன ஜனகராஜ்...அட பாவமே இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?
நடிகர் ஜனகராஜின் மறதி நோய் குறித்து தெரியவந்துள்ளது.
நிலைமை
தமிழ் சினிமாவில், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரமாகளில் இவரது நடிப்பிற்கு இணையே இல்லை. 1978ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகமானார். பட்டைய கெளப்பு படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார் ஜனகராஜ்.
இதனையடுத்து, 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது நடிப்பின் பயணத்தை தொடங்கியுள்ளார். பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் மூலம் கம்பேக் கொடுத்தார். தற்போது அவர் தாத்தா என்கிற குறும்படித்தில் நடித்திருக்கிறார்.
மறந்துபோயிட்டாரு
அண்மையில், அந்த குறும்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆள் மெலிந்து காணப்படுகிறார். அவர் சிரிப்பதை பார்க்கவே பாவமாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
முன்னதாக இவர் மீது பல்வேறு பொய் குற்றசாட்டுகள் புகுத்தி அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பலர் சாதி செய்ததாக செய்தி ஒன்று உலாசியது. அதற்கு காரணம் ஜனகராஜ் மிகவும் வெளிப்படையானவர். தப்பு என தெரிந்தால் யாராக இருந்தாலும் உடனே கோபத்தை காட்டிவிடுவார். இது சினிமா உலகில் பலருக்கும் பிடிக்வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனகராஜுக்கு மறதி நோய் உண்டு. பாரதிராஜாவின் இயக்கத்தில் காதல் ஓவியம் படத்தில் நடித்தபோது படப்பிடிப்பில் தன்னை யார் என்பதையே மறந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் உலவி கொண்டிருந்தாராம். அதன்பின் மெல்ல மெல்ல நினைவுகள் வந்த பின்னரே அவர் நடித்திருக்கிறார் என்று தெரியவந்தது. இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.