காதுல வந்த பிரச்சனை தான்..அதெல்லாம் பொய்...ஜனகராஜ் பேட்டி
கடைசியாக 96 படத்தில் நடித்திருந்த நடிகர் ஜனகராஜ் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
ஜனகராஜ்
தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா என்ற ஒற்றை காமெடியின் தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜனகராஜ். இதனை கடந்து அவரும் ரஜினியும் இணைந்து நடித்த பல பாடல்கள் வெற்றி பெற்று ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றன. 80, 90 களில் மிக முக்கிய நடிகராக வளம் வந்த ஜனகராஜ், 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை.
இருப்பினும் கடைசியாக இவர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “96” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை அடுத்து மீண்டும் படங்களில் இருந்து ஜனகராஜ் ஒதுங்கி இருக்கும் நிலையில், அவரை குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. ஜனகராஜ் அமெரிக்கா சென்று அங்கு செட்டில் ஆகி விட்டதாகவும், தற்போது உடல் நல பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் வளம் வருகின்றன.
அதெல்லாம் பொய்
மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வரும் ஜனகராஜ் அண்மையில், தனது உண்மை நிலை குறித்து மனம் திறந்துள்ளார். அந்த பேட்டியில், தான் அமெரிக்கா எல்லாம் செல்லவில்லை என தெரிவித்து இப்பொதும் தான் சென்னையில் தான் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தனக்கு காதில் பிரச்சனை ஒன்று ஏற்பட்ட போது மருத்துவரை அணுகியபோது, அப்போது மருத்துவர்கள் காதில் கொஞ்சம் கிளீன் பண்ண வேண்டும் என்று செய்தார்கள் அந்த ஒன்று மட்டும் தான் அது மட்டும் தான் தனக்கு பிரச்சனையாக இருக்கிறது என கூறினார்.
மேலும், தனக்கு தற்போதும் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருப்பதாக அந்த பேட்டியில் குறிப்பிட்ட ஜனகராஜ், தனக்கு ஏற்ற பாத்திரங்கள் அமைந்தால் தான் மீண்டும் நடிக்க தயார் என தெரிவித்தார். மேலும், தன்னை பற்றி வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான் என தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையை நினைவிருக்கா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே! Manithan

பழிவாங்கும் படலம் ஆரம்பம்...! சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல் IBC Tamil
