மோசமான உடல்நிலை, தனியாக சுற்றி திரிந்தார்; இப்போ நிலையை பாருங்க - மனம் நொந்த ஜனகராஜ்!

Tamil Cinema
By Sumathi Sep 28, 2023 02:30 PM GMT
Report

பெரிதும் வெளி உலகிற்கு முகம் காட்டாமல் வாழும் நடிகர் ஜனகராஜ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜனகராஜ்

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தனது நகைச்சுவையால் கலக்கியவர் நடிகர் ஜனகராஜ். தனக்கே உரிய பாணியில் பேசியும், சிரித்தும் மக்களை கவர்ந்தார்.

மோசமான உடல்நிலை, தனியாக சுற்றி திரிந்தார்; இப்போ நிலையை பாருங்க - மனம் நொந்த ஜனகராஜ்! | Actor Janagaraj Open Up About His Situation

அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96. அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார். அதன்பின் ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை.

தற்போதைய நிலை

இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவிற்கு சென்று தனியாக சுற்றிக் கொண்டிருப்பதாகவும், உடல்நிலை சரியில்லை எனவும் கூறுகின்றனர். என்னிடம் இதுவரை விசா கூட கிடையாது. எப்படி அமெரிக்கா போவேன்?

மோசமான உடல்நிலை, தனியாக சுற்றி திரிந்தார்; இப்போ நிலையை பாருங்க - மனம் நொந்த ஜனகராஜ்! | Actor Janagaraj Open Up About His Situation

ஒரு முறை கூட போனதில்லை. இங்கேயே தான் இருக்கிறேன். என் மனைவியுடன் இருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களாக இருக்கும் என் சக நடிகர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொள்வேன்.

இணையத்தை கலக்கும் முதற்கனவே.. ஆனால், அந்த நடிகை தற்போதைய நிலை தெரியுமா?

இணையத்தை கலக்கும் முதற்கனவே.. ஆனால், அந்த நடிகை தற்போதைய நிலை தெரியுமா?

ஆனால் யாரும் வருவதும் கிடையாது. நானும் போவதும் கிடையாது. அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். எனக்கு வயசு 68 ஆகிறது. நலமுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.