3 தலைமுறை கண்ட வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை - சோகத்தில் ரசிகர்கள்

tamilcinema venniradaimoorthy வெண்ணிறஆடைமூர்த்தி
By Petchi Avudaiappan Feb 19, 2022 02:41 PM GMT
Report

பிரபல நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலையைக் கண்டு ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். 

வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என கிட்டதட்ட 3 தலைமுறை நடிகர்களோடு காமெடி வேடத்தில் நடித்து அசத்தியவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது காமெடியை 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக மாறினார்.

இவரால் இன்றளவும் வெள்ளித்திரையிலும் புகழ் பெற்றவர்கள் ஏராளம். அந்த காலத்தில் முன்னணி காமெடி நடிகர்களாக வலம்வந்த பல நடிகர்களுக்கு போட்டியாக தனது இரட்டை அர்த்த நகைச்சுவைகளால் ரசிகர்களை கவர்ந்தவர். 

3 தலைமுறை கண்ட வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை - சோகத்தில் ரசிகர்கள் | Current Status Of Venniradai Moorthy

கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்த  வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஜோதிடத்தில் இருந்த திறமையை பார்த்து அவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜோதிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜோதிட நிகழ்ச்சியில் இடையே புராண கதைகளையும் வழங்கி நிகழ்ச்சியை அனைவரையும் விரும்பி பார்க்க வைத்தார். 

இப்படி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமடைந்த வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. வயது மூப்பு காரணமாக தற்போது சினிமாக்களில் இருந்தும் சீரியலில் இருந்தும் அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. 

 வெண்ணிற ஆடை மூர்த்திக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தாலும் அவர் நடிப்பதற்கு மறுத்துவிட்டார் என்றும், கோட்டூர்புரத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவரை  மீண்டும் எப்போது திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.