ரோகித் ஷர்மா தானே நீங்க? ஹிப் ஹாப் ஆதியுடன் ஃபோட்டோ எடுத்த நபர் - வீடியோ வைரல்!
ரோகித் ஷர்மா என நினைத்து ஹிப் ஹாப் ஆதியுடன் நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஹிப் ஹாப் ஆதி. சென்னை சிட்டி கேங் ஸ்டார் என்ற பாடலின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஆம்பள, தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை, மிஸ்டர் லோக்கல், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்துள்ளார். அதன்பின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
வைரல் வீடியோ
நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், ஹிப் ஹாப் ஆதியை இந்திய கிரிக்கெட் வீரர் ‘ரோகித் சர்மா’ என நினைத்து வெளிநாட்டு ரசிகர் ஒருவர், ‘World Cupஐ வென்றதுக்கு நன்றி’ என்று கூறி புகைப்படம் எடுத்துள்ளார்.
தன்னை ரோகித் சர்மா என நினைத்துக் கொண்டிருந்த ரசிகரிடம் நான் ரோகித் சர்மா இல்லை, இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி என கூறியுள்ளார்.