ஹிப்ஹாப் ஆதி யூ-டியூப் சேனல் முடக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

blocked hiphoptamila aadhi youtube channel
By Anupriyamkumaresan Jul 26, 2021 08:06 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் திடீரென மூடப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி யூ-டியூப் சேனல் முடக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Hiphop Tamila Aadhi Youtube Channel Locked

20 லட்சம் பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனலை ஹிப் ஹாப் தமிழா ஆதி வைத்திருந்த நிலையில் அவருடைய பக்கத்தில் இருந்த அனைத்து வீடியோக்களும் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும் அவருடைய யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு அதன் பின்னர் சரியான நிலையில் தற்போது ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.

ஹிப்ஹாப் ஆதி யூ-டியூப் சேனல் முடக்கம் - ரசிகர்கள் அதிர்ச்சி! | Hiphop Tamila Aadhi Youtube Channel Locked

இந்தநிலையில் முடக்கப்பட்ட யூடியூப் சேனலை மீண்டும் கொண்டுவர ஹிப்ஹாப் தமிழா ஆதியின் தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும் விரைவில் அவரது யூடியூப் பக்கம் மீண்டு விடும் என்றும் கூறப்படுகிறது