நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர் தர்ஷன் - நெருங்கிய நண்பர் பகீர் வாக்குமூலம்!

Bengaluru
By Sumathi Jun 15, 2024 05:56 AM GMT
Report

 நடிகர் தர்ஷன் நண்பர் கொலை வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளார்.

 நடிகர் தர்ஷன்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன்(47). இவர் நடிகை பவித்ரா கவுடாவை காதலிப்பதாக தெரிகிறது. தங்களது உறவு 10 ஆண்டுகளை நிறைவு செய்ததாக பவித்ரா கவுடா பதிவிட்டிருந்தார்.

dharshan - pavithra

ஆனால் அதற்கு தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தொடர்ந்து, தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி (33), தர்ஷனை விட்டு விலகிச் செல்லுமாறும், அவரது குடும்பத்தை சீரழிக்க வேண்டாம் எனவும் ப‌வித்ரா கவுடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பவித்ரா தர்ஷனிடம் இதுகுறித்து புகாரளித்துள்ளார். இதனையடுத்து சித்ரதுர்கா மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் ராகவேந்திரா மூலம் ரேணுகா சுவாமியை தர்ஷன் பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு, தர்ஷன், தோழி பவித்ரா கவுடா முன்னிலையில் ரேணுகா சுவாமியை வினய் கவுடா, நாகராஜ், பவுன்ஸர்கள் கார்த்திக், பவன், நந்தேஷ், நிக்கி நாயக், லட்சுமன், பிரதோஷ் உள்ளிட்ட 13 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

சித்ரா தற்கொலை வழக்கு - சாட்சி கூறியதால் கொலை மிரட்டல்...ஹேம்நாத் நண்பர் மனு!

சித்ரா தற்கொலை வழக்கு - சாட்சி கூறியதால் கொலை மிரட்டல்...ஹேம்நாத் நண்பர் மனு!

 நண்பர் வாக்குமூலம்

மேலும், உயிரிழந்த‌ ரேணுகா சுவாமியின் சடலத்தை கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளனர். சடலத்தை கைப்பற்றிய போலீஸார் வழக்குப்பதிவு செய்ததில், கடன் தராததால் ரேணுகா சுவாமியை கொன்றதாக 4 பேர் சரண்டர் ஆகினர். அதன்பின் விசாரணையில், நடிகர் தர்ஷன் கூறியதால் அடித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர் தர்ஷன் - நெருங்கிய நண்பர் பகீர் வாக்குமூலம்! | Fan Murder Actor Darshan Friend Confession

அதன் அடிப்படையில், போலீஸார் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 13 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொலையில் நேரடியாக தொடர்பில் இருந்த தர்ஷனின் நெருங்கிய நண்பர் தீபக் அப்ரூவராக மாறியுள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில், தர்ஷன் பெல்ட்டை கழற்றி ரேணுகா சுவாமியை அடித்தார்.

அதனால் சுருண்டு விழுந்த அவரின் ஆண் உறுப்பில் எட்டி உதைத்தார். இதன் காரணமாக அவர் மயங்கினார். இந்த கொலையில் அவரது பெயரை மறைக்க ரூ.30 லட்சம் பேரம் பேசப்பட்டது. அவரது வழிகாட்டுதலின்படி போலீஸில் சரண்டர் ஆன நிகில் நாயக், ராகவேந்திரா, கார்த்திக், கேசவமூர்த்தி ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் கொடுத்தேன். மீதமுள்ள பணத்தை அவர்களின் குடும்பத்தினருக்கு தர திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் தர்ஷன் போலீஸில் சிக்கிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.