திருமணமான பெண்ணை காதலித்த நண்பர்கள் - கள்ளக்காதலுக்காக நண்பனை குத்தி கொலை செய்த கொடூரம்

death fight friends salem illegal affair
By Anupriyamkumaresan Sep 19, 2021 06:12 AM GMT
Report

சேலத்தில் கள்ளக்காதலுக்காக நடந்த போட்டியில் நண்பரையே குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த கிருபை ராஜுக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான கலைமணி என்ற இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கலைமணியை பார்க்க செல்லும் போதெல்லாம், அவரது நண்பர் கலையரசனையும் அழைத்து சென்றிருக்கிறார். அந்த சமயங்களில் கலையரசனுக்கு கலைமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியிருகிறது.

நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததால் கலைமணியை யார் திருமணம் செய்துகொள்வது என்பதில் போட்டா போட்டி எழுந்திருக்கிறது . இந்த சூழ்நிலையில் சேலம் குமரகிரி அருகே இருக்கும் மலைப்பகுதிக்கு கிருபைராஜும் கலைமணியும் சென்றிருக்கின்றனர் .

அவர்கள் அங்கு சென்று இருப்பது தெரிந்து கொண்ட கலையரசன் பைக்கில் அங்கு சென்று இருக்கிறார். அப்போதும் கலைவாணியை யார் திருமணம் செய்து கொள்வது என்பதில் மீண்டும் பிரச்சினை எழுந்து இருக்கிறது.

திருமணமான பெண்ணை காதலித்த நண்பர்கள் - கள்ளக்காதலுக்காக நண்பனை குத்தி கொலை செய்த கொடூரம் | Salem Illegal Affair Friends Fight Death Murder

இதில் கிருபைராஜ், கலைமணியை நான் திருமணம் செய்து கொள்கிறேன். அதற்கு நீ ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனை மறுத்த கலையரசன் நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலால், ஆத்திரத்தில் கலையரசன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருபைராஜை சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு, கலையரசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.