தக்காளியை பிசைந்து சிம்பிள் மீன் குழம்பு - ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க!

Fish
By Sumathi Oct 01, 2024 01:00 PM GMT
Sumathi

Sumathi

in உணவு
Report

சிம்பிள் மீன் குழம்பு ரெசிபி-ஐ மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்துள்ளார்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் வி.டி.வி கணேஷ் செய்த சிம்பிள் மீன் குழம்பு ரெசிபி-ஐ மாதம்பட்டி ரங்கராஜ் பகிர்ந்துள்ளார். 

தேவையான பொருட்கள்

 மீன், கடுகு, சீரகம்,  வரமிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, வெந்தயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சின்ன வெங்காயம், கல் உப்பு, கொத்தமல்லி தலை, இஞ்சி, பூண்டு மற்றும் நல்லெண்ணெய்

இந்த பிரச்சனைகள் இருந்தால் மறந்தும் கூட இளநீர் குடிக்காதீங்க - கவனம் தேவை!

இந்த பிரச்சனைகள் இருந்தால் மறந்தும் கூட இளநீர் குடிக்காதீங்க - கவனம் தேவை!

செய்முறை

முதலில் தக்காளியை நறுக்கி பாத்திரத்தில் போட்டு பிசைந்து அதில் புளித்தண்ணீர் கரைத்து சேர்த்து வைக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

இடையில் இஞ்சி, பூண்டு தட்டி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்ககவும். அடுத்தாக சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். இதில் உப்பு சேர்த்து தக்காளி, புளித்தண்ணீர் சேர்க்கவும். இதை கொதிக்க விடவும்.

இதில் சுடு நீர் சேர்த்து கொதிக்க விடவும். சிம்மிள் வைத்து கொதிக்க விடவும். அப்போது தான் பச்சை வாசனை போகும். நன்கு கொதி வந்ததும் மீன் உடையாமல் எடுத்து குழம்பில் போடவும்.

இதையும் கொதிக்க விட்டு, நல்லெண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். ருசியான, ஈஸியான மீன் குழம்பு ரெடி..