பிரபல நடன இயக்குநர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்..!
பிரபல நடன இயக்குநர் சின்னா உடல்நலக்குறைவால் (15-ம் தேதி) காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அறிமுகம்
தமிழ் திரைத்துறையில் 1980 மற்றும் 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் சின்னா.
மேலும் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர். சலீம், சேஷூ, வேம்பட்டி சத்தியம், பசுமர்த்தி கிருஷ்ணமூர்த்தி, போன்ற நடன இயக்குநர்களிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.
பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ‘தூறல் நின்னு போச்சு' படம் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘வைதேகி காத்திருந்தாள்',
அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’, ‘செந்தூர பாண்டி', 'வானத்தை போல' உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
காலமானார்
இந்நிலையில் நடன இயக்குநர் சின்னா (15-ம் தேதி) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த நடன இயக்குநர் சின்னா, சின்னத்திரை நடிகையும், நடன இயக்குநருமான ஜெனிபரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சியாக நடிப்பதில்லை... இதனால்தான்? சாய் பல்லவி ஓபன் டாக்!