பிரபல நடிகர் டேனியல் பிலிப் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
பிரபல மலையாள நடிகர் டேனியல் பிலிப் என்ற டி.பிலிப் காலமானார்.அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த பிலிப்?
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியில் நடிகர் டேனியல் பிலிப் என்ற டி.பிலிப் வசித்து வந்தார்.
1980-ம் ஆண்டு வெளியான ‘பிரளயம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘கோட்டயம் குஞ்சச்சன்’,

‘வேட்டன்’, ‘அர்த்தம்’, ‘பழசிராஜா’ உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
காளிதாசன் கலகேந்திரா மற்றும் கேபிஏசி நாடகங்களில் முன்னணி நடிகராக இருந்தார். பின்னர் 1981-ம் ஆண்டு கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய கோலங்கள் படத்தை டி பிலிப் மற்றும் கேடி வர்கீஸ் தயாரித்து உள்ளனர்.
உயிர் பிரிந்தது
இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மகள் வெளிநாட்டில் உள்ளதால் அவர் வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறும் நேரம் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எங்க கதையை படமாக்கிட்டு எங்கள ஏமாத்திட்டாங்க - “ஜெய்பீம்” படத்தின் புதிய சர்ச்சை..!