விடைபெறுகிறேன்: தண்டவாளத்தில் நின்று கணவன் ஸ்டேட்டஸ் - வீட்டில் மனைவி, மகள் செய்த செயல்!

Madurai
By Sumathi Nov 08, 2023 03:29 AM GMT
Report

கணவன், மனைவி, மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

மதுரையைச் சேர்ந்தவர் காளிமுத்து (42). இவர் கார்ப்பென்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஜாக்லின் ராணி (36). இவர்களுக்கு மதுமிதா (12) என்ற ஒரு மகள் உள்ளார்.

madurai

தனது மனைவிக்குப் பிறந்தநாள் என்பதால் மகள் மதுமிதாவுடன் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் காளிமுத்து வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற

பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனர் திடீர் தற்கொலை - அதிர்ச்சி தகவல்!

பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனர் திடீர் தற்கொலை - அதிர்ச்சி தகவல்!

குடும்பமே தற்கொலை

அவர் தண்டவாளத்தில் நின்றபடி திடீரென அவரது வாட்ஸ் அப் ஸ்டேடசில் "விடைபெறுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் சந்தேகமடைந்து தொடர்பு கொண்டதில் ஃபோனை எடுக்கவில்லை. அதனால் பக்கத்து வீட்டு நபர்களிடம் விசாரித்துள்ளனர்.

விடைபெறுகிறேன்: தண்டவாளத்தில் நின்று கணவன் ஸ்டேட்டஸ் - வீட்டில் மனைவி, மகள் செய்த செயல்! | Family Suicide After Birthday Celebration Madurai

அப்போது அவர்கள் சென்று பார்த்ததில் மனைவி ஜாக்குலினும், மகள் மதுமிதாவும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனே தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் இவர்களது உடல்களையும், பின் அங்கு உயிரிழந்த காளிமுத்துவின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.