நடிகை தற்கொலை சம்பவம் - காணாமல் போன ஐபோன் மீட்பு - நண்பரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை...!

Death
1 வாரம் முன்

வாய்தா திரைப்பட நடிகை தற்கொலை சம்பவத்தில் காணாமல் போன ஐபோனை போலீசார் மீட்டுள்ளனர்.

பவுலின் ஜெசிகா 

ஆந்திர மாநிலம், சித்தூர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா என்ற பவுலின்ஜெசிகா (29). இவர், சென்னை விருகம்பாக்கத்தில் அடுக்குமாடியில் குடியிருப்பில் தனியாக வசித்து சினிமாவில் நடித்து வந்தார். ‘வாய்தா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜெசிகா. மேலும், சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். சினிமாத்துறையில் ஒருவரைக் ஜெசிகா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பவுலின் ஜெசிகா தற்கொலை

சமீபத்தில்,  சிராஜுதீன் என்பவருக்கு போன் செய்து, எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கூறி போனை துண்டித்துள்ளார் ஜெசிகா. அதிர்ச்சி அடைந்த சிராஜுதீன், ஜெசிகா தங்கியுள்ள வீட்டின் அருகே வசிக்கும் நண்பர் பிரபாகரன் என்பவருக்கு போன் செய்து, நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். பிரபாகரன் சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது. கதவை தட்டியும், நீண்ட நேரமாக ஜெசிகா கதவு திறக்காததால் சந்தேகமடைந்த பிரபாகரன் இதுகுறித்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார்.

vaaitha-actress-poulin-jesica

போலீசார் விசாரணை

இதை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பவுலின் ஜெசிகா தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதையடுத்து, போலீஸார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெசிகா அறையை சோதனை செய்தனர். அப்போது, ஜெசிகா எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெசிகா வீட்டில் 3 செல்போன்கள் மற்றும் டேப்-இல்லை போலீசார் கைப்பற்றினர். ஆனால், அவருடைய ஐபோன் காணாமல் போயிருந்தது. அந்த ஐபோனை தேடும் பணியில் போலீசார் களமிறங்கினர்.

ஐபோன் மீட்பு

இந்நிலையில், பவுலின் ஜெசிகா தற்கொலை செய்து கொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து பவுலினின் ஐபோன் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐபோனில் தகவல்களோ அல்லது புகைப்படம் , வீடியோக்கள் ஏதாவது டெலிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையின் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை

நடிகை பவுலின் ஜெசிகா தற்கொலை தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீஸார் கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். விசாரணையில், காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சிராஜுதினிடம் பவுலின் ஜெசிகா வாக்குவாதம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக பவுலின் ஜெசிகா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்டுள்ள 3 செல்போன்கள் மற்றும் டேப்-இல் உள்ள விவரங்கள் குறித்தும், அதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.