பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனர் திடீர் தற்கொலை - அதிர்ச்சி தகவல்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலை இயக்குனர்
பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனர், கலை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தவர் நிதின் சந்திரகாந்த் தேசாய். இவர் தேவ்தாஸ், ஜோதா அக்பர், லகான், பாஜிராவ் மஸ்தானி போன்ற வரலாற்று படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இவரது கலை நயத்துக்காக 4 முறை தேசிய விருது பெற்றுள்ளார். இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் கலை இயக்குனராக சாதனை பெற்றுள்ளார். பல இயக்குனர்களின் கற்பனைக்கு உருவம் கொடுத்துள்ளார்.
தற்கொலை
இந்நிலையில், இவர் KD என்ற பெயரில் ஸ்டுடியோவையும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்ஜத் பகுதியில் தொடங்கியிருந்தார். அதில் ஜோதா அக்பர், டிராபிக் சிக்னல், பிக் பாஸ் உள்ளிட்ட படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு செட் அமைத்திருந்தனர். இவர் 2 படங்களை இயக்கியதோடு, பல மராத்திய தொலைக்காட்சி தொடர்களை தயாரித்துள்ளார்.
தற்பொழுது 57 வயதான இவர் இன்று காலை தனது ஸ்டூடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், இவர் தற்கொலை செய்துகொண்டதன் காரணம் குறித்து போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.