வாலிபர்களுடன் இளம்பெண் செய்த காரியம் - ஊர் பஞ்சாயத்து உத்தரவால் கவுரவக் கொலை!
வாலிபர்களுடன் நடனமாடும் வீடியோ வெளியானதால், இளம்பெண்ணை குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுரவக் கொலை
பாகிஸ்தானின் கோ ஹிஸ்தான் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், சில வாலிபர்களுடன் நடனம் ஆடும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ விவகாரம் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துக்கு சென்றுள்ளது.
அவரகள் அந்த இளம்பெண்ணை கொலை செய்ய உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கொலை செய்துள்ளனர். இந்த கவுரவக் கொலை பாகிஸ்தான் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த கிராமத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் அதிரடி
அப்போது அந்த ஊர் பஞ்சாயத்தில் மற்றொரு சிறுமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்ததை அடுத்து அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும், இளம்பெண்ணுடன் நடனமாடிய வாலிபரையும் போலீசார் கிராமத்தினரிடம் இருந்து மீட்டனர்.
கவுரவக் கொலை தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கொலை செய்தவர்கள் மற்றும் பஞ்சாயத்தில் ஆலோசனை செய்தவர்கள், பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தவர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியுள்ளோம்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.