இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச வீரருடன் அதற்கு நான் ரெடி - பாகிஸ்தான் நடிகை பகீர் வாக்குறுதி!
இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் டின்னர் சாப்பிட வருவதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் வாக்குறுதியை கொடுத்துள்ளார்
பாகிஸ்தான் தோல்வி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி இந்தியாவிற்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி மற்றும் பாகிஸ்தான் வீரருக்கு எதிராக இந்திய ரசிகர்கள் 'ஜெயஸ்ரீ ராம்' என கோஷமிட்டது போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தான் ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனையடுத்து இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதுகின்றன.
நடிகை வாக்குறுதி
இந்நிலையில் வங்கதேசம், இந்தியாவை வீழ்த்தினால் வங்கதேச கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் டின்னர் சாப்பிட வருவதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் வாக்குறுதியை கொடுத்துள்ளார். சேஹர் ஷின்வாரி என்ற அந்த நடிகை வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் "அடுத்த போட்டியில் என்னுடைய வங்காளதேச சகோதரர்கள் எங்களுக்காக பழி வாங்குவார்கள்.
இந்தியாவை அவர்கள் வீழ்த்தினால், நான் டாக்காவுக்கு சென்று வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இரவு விருந்துக்கான டேட்டில் (டின்னர் டேட்) கலந்து கொள்வேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
InshAllah my Bangali Bandu will avenge us in the next match. I will go to dhaka and have a fish dinner date with Bangali boy if their team managed to beat India ✌️❤️ ??
— Sehar Shinwari (@SeharShinwari) October 15, 2023