யாசகம் எடுத்து சம்பாதித்தேன்; மலேசியாவில் சொகுசு வாழ்க்கை - வைரலாகும் பாக். பெண்ணின் Video!

Viral Video Pakistan Malaysia World
By Jiyath Nov 29, 2023 05:13 AM GMT
Report

யாசகம் பெற்று மலேசியாவில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறும் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்ணின் வீடியோ விவாதததை ஏற்படுத்தியுள்ளது.

யாசகம் 

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் யாசகம் எடுப்பதை நாம் பொது இடங்களில் பார்த்திருப்போம். சிலர் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வார்கள்.

யாசகம் எடுத்து சம்பாதித்தேன்; மலேசியாவில் சொகுசு வாழ்க்கை - வைரலாகும் பாக். பெண்ணின் Video! | Girl Beggar In Malaysia Now Owns Cars Apartments

இயலாத சிலருக்கு அந்த பணம்தான் உணவு தருகிறது, சிலர் அந்த பணத்தில் குடும்பத்தையும் நடத்துகிறார்கள். ஆனால் சிலர் அவர்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வார்கள். காரணம் எந்த குறையு இல்லாத சிலர் அதனை வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டு காலத்தைக் கடத்துகிறார்கள் என்ற பார்வை நிலவுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதததை கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் நல்ல உடை அணிந்து கண்ணியத்துடன் அமர்ந்திருக்கும் அந்த பெண் சொல்வதை கேட்டால் அதிர்ச்சியடைய செய்கிறது. அந்த பெண் கூறியதாவது "என்னுடைய பெயர் லைபா. நான் வாழ்க்கையில் பணக்காரனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன்.

தன்னம்பிக்கை கதை..! நடுக்கடலில் தனிமை; உயிர்ப் போராட்டம் - திக் திக் 28 மணி நேரம்!

தன்னம்பிக்கை கதை..! நடுக்கடலில் தனிமை; உயிர்ப் போராட்டம் - திக் திக் 28 மணி நேரம்!

அதிர்ச்சி வீடியோ 

எனது அடையாளத்தை மறைக்க விரும்பவில்லை, அதனை மறைக்க முடியாத காரணத்தினால் உண்மையை கூறுகிறேன். கடந்த 5 வருடங்களில் டிராஃபிக் சிக்னல்களில் யாசகம் பெற்று நிறைய பணம் சம்பாதித்தேன். மக்களிடம் பொய்க் கதைகளைச் சொல்லி பணம் கேட்பேன்.

யாசகம் எடுத்து சம்பாதித்தேன்; மலேசியாவில் சொகுசு வாழ்க்கை - வைரலாகும் பாக். பெண்ணின் Video! | Girl Beggar In Malaysia Now Owns Cars Apartments

மக்கள் அதிகம் விசாரிக்காமல் கொடுத்து விடுவார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்று வருவேன். நான் மலேசியாவில் வசிக்கிறேன், அங்கு எனக்கு இரண்டு அப்பார்ட்மெண்ட்கள், கார்கள் மற்றும் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறேன்’ என லைபா கூறியுள்ளார். மொத்தம் 1 நிமிடம் 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைத்தளமான எக்ஸில் @shahfaesal என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வீடியோவை சுமார் 3 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் இதனால்தான் உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களுக்கும் உதவி செய்ய யோசிக்க வேண்டியுள்ளது என்று தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.