அரங்கேறும் கொடூரச்செயல்...குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மனித மலம் - போலீசார் விசாரணை!

Crime Viluppuram
By Swetha May 15, 2024 06:30 AM GMT
Report

கிராமத்தில் உள்ள குடிநீர்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் கிணறு

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கிணற்று தண்ணீரை மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றி, குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில் மலம் கலக்கப்பட்டுள்ளது.

அரங்கேறும் கொடூரச்செயல்...குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மனித மலம் - போலீசார் விசாரணை! | Faeces Being Mixed In The Drinking Well

இந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டு கிணற்றில் நீருக்கு பதில் பெருக்கெடுத்து ஊற்றும் பெட்ரோல் - வியப்பில் மக்கள்!

வீட்டு கிணற்றில் நீருக்கு பதில் பெருக்கெடுத்து ஊற்றும் பெட்ரோல் - வியப்பில் மக்கள்!

மனித மலம்

தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து கிணற்றில் மலம் கழித்ததாக மக்கள் குற்றம் சாடியுள்ளார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக பயன்படுத்திய குடிநீர்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டை உளுக்கியது.

அரங்கேறும் கொடூரச்செயல்...குடிநீர் கிணற்றில் கலக்கப்பட்ட மனித மலம் - போலீசார் விசாரணை! | Faeces Being Mixed In The Drinking Well

இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் வேங்கைவயல் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மற்றொரு சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேரில் சென்ற போலீசார் அந்த தொட்டிக்குள் உள்ள தண்ணீரை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது, தண்ணீர் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கிணற்றில் தேன் கூடு இருந்ததடாகவும் தெரிவித்துள்ளனனர். இந்த விவகாரம் குறித்த விசாரணையில் அந்த குடிநீர் தொட்டி சுற்றி இரும்பு வேலி அமைத்து தரப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.