வீட்டு கிணற்றில் நீருக்கு பதில் பெருக்கெடுத்து ஊற்றும் பெட்ரோல் - வியப்பில் மக்கள்!
கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீருக்கு பதில் பெட்ரோல்
திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவரது வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. வீட்டின் எதிர்புறம் 300 மீட்டர் தொலைவில் பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது.
இதனால், அங்குள்ள சேமிப்பு கிடங்கில் கசிவு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் அந்த கிணற்றை மூடியுள்ளனர்.
ஆச்சர்ய சம்பவம்
மேலும், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அப்பகுதி மக்களுக்கு, சொந்த செலவில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கிணற்றில் பெட்ரோல் ஊற்றெடுப்பது ஆபத்தை விளைவிக்கும் என அதனை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.