இனிமேல் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரிக்கும் : ராகுல் காந்தி

Rahul Gandhi
By Irumporai May 22, 2022 10:03 AM GMT
Report

இனி,பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத்தொடங்கும் என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் :

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் ரூ.0.8, ரூ.0.3 என உயரத்தொடங்கும். மத்திய அரசு மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்.

2020-ஆம் ஆண்டு மே மாதம் ரூ.69-க்கு விற்பனையான பெட்ரோல் விலை தற்போது ரூ.96.7-க்கு விற்பனையாகிறது.’ என பதிவிட்டுள்ளார்.