வெறுப்புணர்வை துாண்டும் வகையில் கருத்து தெரிவித்த முகமது சுபைர் அதிரடி கைது..!

Delhi Government Of India
By Thahir Jun 28, 2022 06:51 AM GMT
Report

கடந்த 2018-ம் ஆண்டு செய்த ட்வீட்டரில் இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வண்ணம் கருத்து கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆல்ட் நியூஸ் தளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கை

பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸின் இணை நிறுவனர் முகமது சுபேர் 2020-ம் ஆண்டு வெளியிட்ட கருத்து குறித்து விசாரிக்க டெல்லி காவல் துறை அவரை அழைத்துச் சென்றது.

வெறுப்புணர்வை துாண்டும் வகையில் கருத்து தெரிவித்த முகமது சுபைர் அதிரடி கைது..! | Fact Checker Mohammed Zubair Arrest

நேற்று 2018-ம் ஆண்டு அவர் பதிவு செய்த ட்வீட்டிற்காக அவரை கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையின் நகலை சமர்பிக்குமாறு பல முறை வேண்டுகோள் விடுத்தும் வழங்கப்படவில்லை என ஆல்ட் நியூஸின் நிறுவனர் ப்ரத்திக் சின்ஹா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவு 

2018-ம் ஆண்டு முகமது சுபேர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ரிஷிகேஷ் முகர்ஜீ 1983-ல் இயக்கிய `கிசி சே நா கேஹ்னா’ திரைப்படத்தில் வரும் காட்சி ஒன்றைப் பகிர்ந்து இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.  

சுபைருக்கு வலுக்கும் ஆதரவு

இவரது கைது நடவடிக்கைக்கு எதிராக பலரும் ட்விட்டரில் கருத்து பதிவேற்றி வருகின்றனர். திரினாமுல் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்ததுடன்,

பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கள் வளைகுடா நாடுகளில் எதிர்ப்பைப் பெற்றும் அவர் மீது காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவரது ட்விட்டர் பக்கத்தில் முகமது சுபேருக்கு ஆதரவாக, உண்மைக்காக ஒலிக்கும் ஒரு குரலை அடக்கினால், இன்னும் ஆயிரம் குரல்கள் எழும்பும் என்று ட்வீட் செய்துள்ளார்.