டெல்லியில் 300 காவல் துறை அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு

delhi covid surge 300 policemen affected under quarantine
By Swetha Subash Jan 10, 2022 05:30 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22, 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் முழு ஊரடங்கு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணாமாக பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர்.

டெல்லி காவல் துறை தலைமை அலுவலகம் உள்பட அங்கு உள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களிலும் ஏராளமான காவல் பணியாளர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 22,751 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

இது கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதிக்குப் பிறகு அதிகம் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,179 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.