1000 பேர் உயிரிழப்பு - கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?
வெள்ளப் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளப் பாதிப்பு
வடகொரியாவை கனமழையும், வெள்ளமும் புரட்டி போட்டு வருகிறது. சினுய்ஜு நகரத்திலும், சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள பியாங்யான் மாகாணத்தின் உய்ஜு பகுதியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
வெள்ள நீரில் வடகொரியா தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெஞ்சை உலுக்கியது. அதிபர் கிம் ஜான் உன், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ரப்பர் படகில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
மரண தண்டனை?
பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால், 4,000 பேர் வரையில் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.. நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையில், ஏற்றுக்கொள்ள முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், 20 முதல் 30 அதிகாரிகள் வரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.