வெளியான தேர்வு முடிவுகள் : ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள்

By Irumporai Jun 20, 2022 06:43 AM GMT
Irumporai

Irumporai

in கல்வி
Report

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் பிளஸ் 2பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வு

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதி உள்ளனர் . அதில் 90.07% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஒட்டு மொத்தமாக 10ம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும் 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 85.8% பேரும் மாணவிகள் 94.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.2019 பொதுத் தேர்வில் 95.2% தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 90.07% ஆக தேர்ச்சி குறைந்துள்ளது. 

குமரி மாவட்டம் முதலிடம் 

10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி தொடங்கும்.10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.10ம் வகுப்புத் தேர்வில் 85.25% அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

[

சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவில்லை.886 அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் 100% 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 4,006 பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கிலத்தில் 45 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் 2186 பேர் 100க்கு 100க்கு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் 3841 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொது தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

6,016 மாற்றுத் திறனாளிகளின் 5,424 மாற்றுத் திறனாளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 242 சிறைவாசி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 133 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 600 ஐ கடந்த கொரோனா பாதிப்பு : சென்னையில் எவ்வுளவு தெரியுமா?