தமிழகத்தில் 600 ஐ கடந்த கொரோனா பாதிப்பு : சென்னையில் எவ்வுளவு தெரியுமா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 692 ஆக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனா பாதிப்பு 596- ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு 692 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் படி : தமிழக்த்தில் கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 243-பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 19 June 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) June 19, 2022
Today/Total - 692 / 34,60,874
Active Cases - 3,522
Discharged Today/Total - 243 / 34,19,326
Death Today/Total - 0 / 38,026
Samples Tested Today/Total - 19,496 / 6,68,90,024@
Test Positivity Rate (TPR) - 3.5%#TNCoronaUpdate #TN pic.twitter.com/Oafy2gNIOK
இதுவரை சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,522- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,026- ஆக உள்ளது.
தலைநகர் சென்னையில் 306- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.