இன்று வெளியாகிறது 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

Government of Tamil Nadu Anbil Mahesh Poyyamozhi
By Thahir Jun 20, 2022 02:12 AM GMT
Report

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது.

தேர்வு எழுதியோர் எண்ணிக்கை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 37 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில்,

இன்று வெளியாகிறது 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்..! | Today Published Exam Result

சுமார்7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவு

அந்த வகையில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது.

இதற்கு முன்பெல்லாம், 10, 12-ம் வகுப்புக்கு வெவ்வேறு நாட்களில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த முறை ஒரே நாளில் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.

அதன்படி, காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், பிற்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகின்றன.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.