செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் - ஆய்வில் ஆச்சர்ய தகவல்!
செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டிருந்தது. தற்போது நாசாவின் இன்சைட் லேண்டரால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில் செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 7.2 முதல் 12.4 மைல்கள் ( 11.5 முதல் 20 கி.மீ) வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்கிறது.
திரவ நீர் தேக்கம்
இதில் நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும். மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம்
உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான புகைப்படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
