செவ்வாய் கிரகத்தில் நீர் - ஆதாரத்தை கண்டுபிடித்து அசத்திய சீனா!

China
By Sumathi May 01, 2023 05:27 AM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை சீன ரோவர் உறுதி செய்துள்ளது.

செவ்வாயில் நீர்

செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும்,

செவ்வாய் கிரகத்தில் நீர் - ஆதாரத்தை கண்டுபிடித்து அசத்திய சீனா! | China S Zhurong Rover Traces Of Water In Mars

உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா சாதனை

இதன் மூலம், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது. குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

செவ்வாய் கிரகத்தில் நீர் - ஆதாரத்தை கண்டுபிடித்து அசத்திய சீனா! | China S Zhurong Rover Traces Of Water In Mars

இருப்பினும், அதன் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.