ராமர் பாலம் க்ளிக்; எப்படி இருக்கு பாருங்க - ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்ட படம்!
ராமர் பாலத்தின் ஃபோட்டோவை ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்ந்துள்ளது.
ராமர் பாலம்
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் இலங்கையை இணைக்கும் வகையில் ராமர் பாலம் இருந்ததாக கூறப்படுகிறது. பாம்பன் தீவுக்கும், மன்னார் தீவுக்கும் இடையே 48 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் இருந்ததாக கூறப்படுகிறது.
புராணங்கள் அடிப்படையில் இது ராமரின் ராணுவ படையால் கட்டமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னொரு புறம், கடலுக்கு நடுவே மணல் திட்டுகள் உள்ளன. இந்த திட்டுகளில் தான் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.
ஐரோப்பிய விண்வெளி
இந்த மணல் திட்டுகள் பாலம் போன்றும் இந்தியா- இலங்கை இடையே பயன்படுத்தப்பட்டுள்ளன. 15ம் நூற்றாண்டு வரை இந்த பாலம் இருந்ததாகவும், அதன்பிறகு புயல்களால் இந்த பாலம் சீர்குலைந்ததாகவும் கூறப்படுகிறது.
? Check out our #WeekInImages 17-21 June 2024 ? https://t.co/0Y6huKpW9S pic.twitter.com/0KaaOMu5vB
— European Space Agency (@esa) June 23, 2024
இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ராமர் பாலம் தொடர்பான போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கோப்பர் நிக்கஸ் சென்டினல் - 2 என்ற செயற்கைகோள் படம் பிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகள் இடையே நீலநிற கடல்நீருக்கு நடுவே வெள்ளை நிறத்தில் திட்டுக்கள் தெரிகின்றன. இந்த திட்டுக்கள் தான் ராமர் பாலம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.