பீகாரில் சீதா தேவிக்கு பிரம்மாண்ட கோவில் - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
அமித் ஷா பிரச்சாரம்
இன்று 4-ஆம் கட்ட தேர்தல் முடித்துள்ள நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடக்கவுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும் சூழலில், வடமாநிலங்களில் பல இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடமாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்களை வைத்து வரும் அவர், பாஜக அரசு கொண்டுவரவுள்ள திட்டங்களையும் குறிப்பிட்டு வருகின்றார்.
சீதா கோவில்
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பேசும் போது, பாஜக எப்போதும் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை என குறிப்பிட்டு, அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிய பிரதமர் மோடிக்கு, சீதா தேவி பிறந்த இடத்தில் பெரிய நினைவிடம் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது என நினைவுபடுத்தினார்.
பீகாரில் சீதாதேவிக்கு கோயிலை கட்ட முடியும் என்றால், அது நரேந்திர மோடியால் தான் முடியும் என திட்டவட்டமாக தெரிவித்த அமித் ஷா, புராணத்தின் படி, அரசர் ஜனகர் சீதாமர்ஹிக்கு வயலில் ஒன்றில் உழுது செய்து கொண்டிருந்த போது, ஒரு மண் பானையிலிருந்து சீதா தேவி உயிர்பெற்றார் என்றும் நம்பப்படுகிறது.