என்னுடைய 5 கேள்விகள் - பதிலளியுங்கள் ராகுல் காந்தி? அமித் ஷா கேள்வி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 கேள்விகளை வைத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
இன்று 4-ஆம் கட்ட தேர்தல் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடக்கவுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும் சூழலில், வடமாநிலங்களில் பல இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அன்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 கேள்விகள்
பிரச்சாரத்தில் அமித் ஷா, ராகுல் காந்தியிடம் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நான் ராகுல்காந்திக்கு பகிரங்கமாக 5 கேள்விகள் விடுக்கிறேன்.
1. முஸ்லிம் தனிநபர் சட்டத்துக்கு மாற்றாக நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமா? வேண்டாமா?
2. பிரதமர் மோடி ஒழித்த 'முத்தலாக்' முறை நல்லதா? கெட்டதா? நீங்கள் 'முத்தலாக்'கை திரும்ப கொண்டுவர விரும்புகிறீர்களா?
3. பிரதமர் மோடி காஷ்மீருக்கு கொடுத்த சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கியதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?
4. ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏன் செல்லவில்லை?
5. பிரதமர் மோடி நடத்திய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நல்லதா? கெட்டதா? அதனை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?
இந்த கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். வரும் மே 20-ஆம் தேதி ரேபரேலிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.