மெட்டா நிறுவனத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் - என்ன காரணம்?
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெட்டா
உலகெங்கிலும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது. தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கி வருகின்றன.
இதனை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், மெட்டா நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும் வகையில் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல நாடுகள் புகார் தெரிவித்தது.
7 ஆயிரம் கோடி அபராதம்
அதன் அடிப்படையில் 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையின் இறுதியில், மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.100 கோடி அபராதம் விதித்துள்ளது.
ஆனால், 'இந்த புகாரின் படி பார்க்கையில் எந்த ஒரு வாடிக்கையாளர்களும் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை' என மெட்டா நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.