பேஸ்புக்கில் ரூ.6 கோடி சம்பளம்; ராஜினாமா செய்து சொந்த தொழில் தொடங்கிய இந்தியர் - எதற்காக?
இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் ரூ.6 கோடி ஊதியம் பெற்ற பேஸ்புக் வேலையை ராஜினாமா செய்து சொந்த தொழில் தொடங்கியுள்ளார்.
பேஸ்புக் வேலை
இந்திய வம்சாவளியை சேர்ந்த என்ஜினியரான ராகுல் பாண்டே என்பவர் கலிபோர்னியாவிலுள்ள மெட்டா நிறுவனத்தின், பேஸ்புக்ககில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மற்றும் மேலாளராக இருந்துள்ளார்.
இவரின் ஆண்டு சம்பளம் ரூ.6.5 கோடி. கடந்த 2017ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த ராகுல் பாண்டே 2022ம் ஆண்டு பணியிலிருந்து வெளியேறினார். ஏன் அந்த வேலையை வேண்டாம் என்று ராஜினாமா செய்தது குறித்து ராகுல் பாண்டே கூறியதாவது "நான் பேஸ்புக்கில் சேர்ந்த முதல் 6 மாதங்கள் மிகவும் கவலையாக இருந்தேன்.
நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் பணிக்கு தகுந்த மாதிரி மாற சிரமப்பட்டேன். நான் சேர்ந்த ஓராண்டுக்குள் பேஸ்புக் உள்விவகாரங்களால் போராட்டங்களை எதிர்கொண்டது. எனது சக ஊழியர்கள் பலர் நிறுவனத்திலிருந்து வெளியேறி வேறு நிறுவனங்களில் சேர்ந்தனர். இதனால் நான் ஈடுபட்டு இருந்த பல திட்டங்கள் தாமதம் ஏற்பட்டது.
ராஜினாமா
பேஸ்புக்கில் இரண்டாம் ஆண்டின் முடிவில், பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயர்களால் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவியை உருவாக்கினேன். நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றேன். அடிப்படை சம்பளமாக ரூ.2 கோடி மற்றும் சுமார் 2 கோடி பங்குகளை பெற்றேன்.
பேஸ்புக்கில் பணியாற்றிய கடைசி ஆண்டில் நான் மேலாளராக பணியாற்றினேன். சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி பிறகு ஒரளவு நான் செல்வ செழிப்பு அடைந்தேன். 2021ல் எனது மொத்த சம்பளம் 8 லட்சம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.6.5 கோடிக்கு மேல்) தாண்டியது. இதனையடுத்து மெட்டா நிறுவனத்தை தாண்டிய பொறியியல் துறை அறிவை பெறுவதில் ஆர்வம் செலுத்தினேன். அதன் காரணமாக 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பணியை ராஜினாமா செய்தேன்.
பின்னர் மென் பொறியாளர்களுக்கு உதவும் வகையில் 'டாரோ' என்ற புத்தாக்க நிறுவனத்தை தொடங்கினேன். நாட்டில் அதிகம் வருமானம் ஈட்டும் 1 சதவீத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த மட்டத்தில், பணம் உண்மையில் தகுதியானதாக உணரவில்லை, அதிர்ஷ்டம் ஒரு பெரிய பங்கினை வகிக்கிறது" என்று ராகுல் பாண்டே தெரிவித்துள்ளார்.